நீலகிரியில் திருட்டு வழக்கில் ஒருவருக்கு சிறை

நீலகிரியில் திருட்டு வழக்கில் ஒருவருக்கு சிறை

சிக்கிய திருடன்

நீலகிரியில் கண்காணிப்பு கேமராவால் திருடன் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு எம்.ஒசட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (54). அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் கடந்த 38 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்றார்.

மறுநாள் அவருடைய வீட்டுக் கதவு உடைந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். வீடு திரும்பிய சீனிவாசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். இதில் வீட்டிலிருந்த ஒரு பவுன் தங்க நகை மட்டும் திருடு போயிருந்தது. இதுகுறித்து அருவங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மைக்கேல் (39) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீஸார் மைக்கேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story