ஆசனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் படுகொலை 3 பேர் கைது !

ஆசனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் படுகொலை 3 பேரை போலிசார் கைது செய்தனர்.

ஆசனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் படுகொலை 3 பேர் கைது. சத்தி அடுத்த தலமலை வனப்பகுதிக்கு உட்பட்ட தொட்டாபுரம் வனப்பகுதியில் கடந்த 26 ம் தேதி தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வனப்பகுதிக்குள் துர்நாற்றம் வீசி உள்ளது. வனவிலங்குகள் ஏதாவது இறந்து விட்டதா என வனத்துறையினர் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வந்ததால சந்தேகமடைந்த வனத்துறையினர் இது பற்றி உடனடியாக ஆசனூர் போலீஸார்க்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் அந்த சாக்கு முட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது. மனித எலும்பை கைப்பற்றிய போலீஸார் மனித எலும்புகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தி வந்தனர்.

அந்த பகுதியில் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா, வேறு பகுதியில் கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றார்களா என விசாரணை மேற்கொண்டு வருந்தனர். விசாரணையில் எழும்புகள் கடந்த மே 27 தேதி காணாமல் போனது தொட்டாபுரம் கிராத்தை சேர்ந்த குமார் என தெரியவந்தது.

குமார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினம் தலமலை வி.ஏ.ஓ விடம் தொட்டாபுரம் நாகமல்லு (25) என்பவர் குமாரை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். பிறகு அவரை ஆசனூர் போலீஸாரிடம் விஏஓ ஒப்படைத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் முத்துமணி (43) மாதேவன் (24) என இருவரை கைது செய்தனர்.

கைது செய்யபட்ட நாகமல்லு அளித்த வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நானும் என அம்மா முத்துமணி, தந்தை ராமசாமி வேலைக்கு சென்று வருகிறார். எனது தம்பி சங்கர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். என் அம்மாவுக்கும் குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளதொடர்பு இருந்ததாக தெரிகிறது.

இதுபற்றி குமாரை எச்சரித்தோம். ஆனால் தொடர்ந்து கள்ளதொடர்பில் இருந்து வந்தனர். இந்நிலை கடந்த மே 27 ம் தேதி நான் தோட்டத்தில் இருந்து வீட்டிக்கு வரும் போது குமாரும் எனது அம்மாவும் தனிமையில் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தேன். இதை கண்ட நான் ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியால் தலையில் அடித்தேன். இதில் குமார் சம்பவயிடத்தில் உயிரிழந்தார் பின்னார் கொலையை மறைக்க என பெரியப்பா மகன் மாதேவனை துனைக்கு அழைத்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டினேம்.

வனப்பகுதியில் உடலை வீசிவிட்டால் வனவிலங்குகள் தின்று விடும் என நினைத்து உடலை அடந்த வனப்பகுதியில் கொண்டு சென்று வீசிவிட்டு வந்து விட்டேம். யாரும் எங்களை கண்டு பிடிக்க வில்லை என நினைத்து கொண்டிருந்தோம் ஆனால் கடந்த ஜீன் 26 ம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது எழும்புகளை பார்த்து போலீசாரிடம் தெரிவித்து விசாரணை மேற்கொண்டனர்.

இனி போலீசாரிடம் மாட்டி விடிவிடுவேம் என நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தாக தெரிவித்தார். கள்ளதொடர்பால் இளைஞர் கொலை செய்யபட்ட சம்பவம் தாளவாடி மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story