தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு !!

தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு !!

 ஒருவர் உயிரிழப்பு

சோலை கொட்டாய் பகுதியில் சாலையோரம் உள்ள நடைமேடையில் நின்றிருந்த வாலிபர் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சோலை கொட்டாய் பகுதியில் சாலையில் நடைமேடையில் நின்றுகொண்டு இருந்த வாலிபர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி(36) மகன் கண்முன்னேயே சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை சின்னசாமி தன்னுடைய மகனை பள்ளியில் விட்டு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.அதனை வாங்க சோலைகொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்க தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடக்க நடைமேடையில் நின்றுள்ளார்.

அப்பொழுது பாப்பிரெட்டிபட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்துக்கொண்டு ஒருந்த தனியார் பேருந்து எதிரில் கட்டுப்பாட்டை இழந்து வந்துக்கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதலை தவிற்க தனியார் பேருந்து ஓட்டுனர் இடது புறம் பேருந்தை திருப்பியுள்ளார்.அப்பொழுது சாலையை கடக்க நடைமேடையில் நின்றிருந்த சின்னசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்பே தந்தை சின்னசாமி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மதிகோன் பாளையம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.பேருந்து ஓட்டுனரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story