தனியார் பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் பலி !
விபத்து
செங்குளம் அருகே உள்ள விரிச்சலாற்று பாலம் வளைவில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்நநு மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த குட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கருத்தலக்கம்பட்டியைச் சேர்ந்தவர் குழந்தைராஜ் (32). இவர் இன்று காலை ஷேர் ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டு நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செங்குளம் அருகே உள்ள விரிச்சலாற்று பாலம் வளைவில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்நநு மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த குட்டுப்பட்டியைச் சேர்ந்த வெள்ளையன் (59) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். குட்டுப்பட்டியைப் சேர்ந்த பொன்னுச்சாமி (55) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் குழந்தைராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக குழந்தை ராஜ் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் பொன்னுச்சாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story