விருதுநகர் அருகே வெடிவிபத்தில் ஒருவர் பலி
விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (47) இவருக்கு சொந்தமான தோட்டம் ஆமத்தூர் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் உள்ளது.
மேலும் இந்த தோட்டத்தில் தகர செட் அமைத்து நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக தொழிலாளர்களை வைத்து பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பேன்சி ரக பட்டாசு தயாரிக்க பயன்படும் மருந்து கலவையில் ஏற்பட்ட ஊராய்வு காரணமாக திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு தோட்டத்தில் இருந்து பயங்கர வெடி சத்தத்தை கேட்ட கிராம மக்கள் இந்த வெடி விபத்து குறித்து உடனடியாக ஆமத்தூர் போலீசார் மற்றும்,தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் வெள்ளூரை சேர்ந்த கண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் தகர செட் இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாரேனும் காயம் அடைந்து சிக்கி உள்ளார்களா என போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியான நிலையில் ஒருவர் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வெடி விபத்து தொடர் பாக சட்ட விரோதமாக பட்டாசு ஆலை நடத்திய மகேஸ்வரன் என்பவர் மீது ஆமத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.