ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி:16 பேர் காயம்

உலகம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான நிலையில், 16 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் திண்டுக்கல் மதுரை திருச்சி கரூர் திருப்பூர் தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகளும் 430 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 16 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டனர்.வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல், தான் வளர்த்த காளையே, வயிற்றில் முட்டி குடல் சரிந்து செபஸ்தியார் என்பவர், கீழே விழுந்தார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags

Next Story