மோட்டார் சைக்கிள் - லாரி மோதல் ஒருவர் உயிரிழப்பு
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் நோக்கி திருவனந்தபுரத்திலிருந்து சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கொல்லம் பகுதியை சேர்ந்த அல்டாப் (24)என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று இரவு 9:30 மணியளவில் அந்த லாரி ஆரல்வாய்மொழி அருகில் முத்துநகரை கடந்து, தேவ சகாயம் மவுண்ட் விலக்கு பகுதியில் சென்றது. அப்போது எதிரே காவல் கிணற்றிலிருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குளச்சல் கொட்டில் பாடு பகுதியை சேர்ந்த ஒருவர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு சென்று பலியானவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story