தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

போலீசார் விசாரணை 

நடந்து சென்றவர்மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் எருத்துகாரன்பட்டி அருகே ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா அருகே நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வளைவில் திரும்பிய போது சண்முகத்தின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சண்முகத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்து விட்டார். இதனையறிந்த அரியலூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story