ஷேர் ஆட்டோ மோதி ஒருவர் பலி

ஷேர் ஆட்டோ மோதி ஒருவர் பலி
X

ஷேர் ஆட்டோ மோதி பலி

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளயத்தில் ஷேர் ஆட்டோ மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் வெங்கடாசலம், 51. கூலி. இவர் நேற்றுமுன்தினம் அதே பகுதியில் மாலை 06:45 மணியளவில் கடைக்கு சென்று பன் வாங்கிக்கொண்டு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஷேர் ஆட்டோ இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரது மனைவி வசந்திக்கு தகவல் தர, நேரில் வந்த இவர், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து கொண்டு, பெருந்துறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 07:05 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷேர் ஆட்டோ ஓட்டுனர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த மாதேஸ், 49, என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story