வாகனம் மோதி ஒருவர் பலி
பலி
நயினார்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரியைச் சேர்ந்தவர் அமாவாசை மகன் சிவபெருமாள், 29; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்றார்.
நள்ளிரவு 12:45 மணியளவில் நயினார்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிவபெருமாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சிவபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story