நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கோப்பு படம்
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குப்பம், சாலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் வயது 53 . இவர் மே 28ஆம் தேதி காலை 11 மணியளவில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் - டி என் பி எல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள அமெரிக்கன் கார்டன் அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த TN 47 AA 5388 என்ற எண் கொண்ட TATA ACE வாகனம், சண்முகம் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சண்முகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சண்முகத்தின் மகன் சுதாகர் வயது 28 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த சண்முகத்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக சரக்கு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.