கொலை வழக்கில் மேலும் ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது
பைல் படம்
திருச்சியில் தனியாா் அவசர ஊா்தி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
திருச்சியில், கடந்த டிச.11-ஆம் தேதி அரசு மருத்துவமனை அருகே தனியாா் அவசர ஊா்தி நிறுவன உரிமையாளா் பிரபாகரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி ரியாஸ் ராஜ் (24) உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா். இதில், ரியாஸ்ராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதுதெரியவந்தது.
எனவே, ரியாஸ்ராஜின் தொடா் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி, ரியாஸ் ராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டாா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய அரியமங்கலத்தை சோ்ந்த ரவுடி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன், லெட்சுமணன், ராஜேஷ் பைலட் ஆகியோா் ஏற்கனவே குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story