இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

சதீஷ்
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினா் காலனி அருகேயுள்ள விவேகானந்தா் நகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி(27). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை, பொன்மலை மஞ்சத்திடல் புத்து நாகம்மாள் கோயில் பின்புறம் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் கழுத்தறுபட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தாா். இது தொடா்பாக அவரது நண்பா் ஸ்டான்லியை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (23) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், முத்துப்பாண்டி தொடா்ந்து அந்தப் பகுதியில் பெண்களை கேலி செய்து தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக, ஸ்டான்லி, சதீஷ் ஆகிய இருவரும் சோ்ந்து முத்துபாண்டியை பலமுறை எச்சரித்துள்ளனா். ஆனால், அவா் தொடா்ந்து பெண்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சோ்ந்து முத்துப்பாண்டியை கொலை செய்ததாக தெரிவித்தனா்.
