கல்லுவழி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கைது செய்யப்பட்டவர்கள்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியைச் சேர்ந்தவர் மரக்கடை உரிமையாளர் சின்னப்பன். இவர் மனைவி உபகாரமேரி. இவரது மருமகன்வேதபோதக அரசி. பேத்தி, பேரன் ஆகியோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
ஜன.26ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் துாங்கி கொண்டிருந்த 5 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். காளையார்கோவில் போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் தேவகோட்டை தென்னீர்வயலைச் சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் கல்லுவழியை சேர்ந்த முனியாண்டி மகன் கணபதியை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது தினேஷ்குமார் 4 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. அவர் தனது சொந்த ஊரில் இருந்து தேவகோட்டைக்கு வாடகை வீட்டுக்குச் சென்றதும் தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டில் சோதனை செய்ததில் கல்லுவழியில் கொள்ளையடித்த சில நகைகள் சிக்கின. தினேஷ்குமாரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படையினர் தேவகோட்டை அருகேயுள்ள முத்தூரணிக்கு அழைத்து வந்தனர்.
தினேஷ்குமார் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து எஸ்.ஐ., சித்திரைவேலையும், சரவணக்குமாரையும் தாக்க முயன்றுள்ளார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தினேஷ்குமாரை சுட்டு பிடித்தார். இதனை தொடர்ந்து மேலும் தேவகோட்டை வாடியார் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் குமார் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.