சிறுமி பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
வெள்ளக்கோவில் தேர் திருவிழாவில் 17 வயது சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவிலில் கடந்த மார்ச் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வீரக்குமாரசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பாட்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருந்த கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வரும் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்திவிட்டதாக இது வரை மணிகண்டன் 29, பிரபாகர் 32, தினேஷ் 27, பாலசுப்பிரமணி 30, நவீன்குமார் 26, நந்தகுமார் 30 மற்றும் தமிழ்செல்வன் 28 ஆகிய 7 பேரை காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வந்த காவல்துறையினர் வெள்ளகோவிலை சேர்ந்த மோகன் குமார் 32 என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story