நண்பனை கொன்ற இருவரில் ஒருவர் கைது - மற்றொருவர் தலைமறைவு !
குற்றவாளிகள்
சங்ககிரி: சிறையில் ஏற்பட்ட பழக்கம் நண்பனை கொன்ற இருவரில் ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு போலீசார் வளைவீச்சு.பைக் செல்போனை பறிக்க கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வாலிபர் கொலையில் சிறை நண்பரை போலீசார் கைது செய்தனர். பைக் செல்போனை பறிக்க கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரிபட்டி பகுதியில் குடியை மறக்க கயிறு கட்டுவதற்காக கோயில் உள்ளது. இக்கோயிக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான மானுவக்காடு என்னும் இடத்தில் கடந்த 25ஆம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக சங்ககிரி போலீஸ்சாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார் உடல் அழுகி நிலையில் தலை கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு மர்ம நபர்கள் கொலை செய்து வீசி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்த நபர் பற்றி விசாரித்ததில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜம்பு பட்டறை வீதியைச் சேர்ந்த கார்த்தி (36), என்பதும் இவர் கடந்த 23ஆம் தேதி சங்ககிரிக்கு தனது இரண்டு நண்பர்களுடன் கார்த்தி பைக்கில் வந்துள்ளார். இதில் அவருடன் வந்த இருவர் தான் கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டனர். அந்த நபர்களை பிடிக்க சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் உடன் வந்தது ஈரோட்டை சேர்ந்த நண்பர்கள் மதியழகன், கௌரிசங்கர் என்பது தெரியவந்தது. அதில் ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள வர்ணாபுரம் பகுதியை சேர்ந்த கௌரிசங்கர் (24) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்தி குடும்ப தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சிறைக்கு வந்த பொழுது சிறையில் வேறொரு குற்ற வழக்குக்காக தண்டனை அனுபவித்து வந்த தனக்கும் தன்னோட நண்பர் மதியழகனுக்கும் கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தற்பொழுது பெயிலில் உள்ளதால் கார்த்தி இடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கார்த்தி வசம் அதிக பணப்புழக்கம் இருந்ததால் கார்த்தியை தனியாக அழைத்து வந்து பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் ஆசை வார்த்தை கூறி சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கோழிக்கால்நத்தம் கஸ்தூரிபட்டி மானுவக்காடு பகுதிக்கு அழைத்து வந்து மது அறிந்துகொண்டு போதை தலைக்கு ஏறவே தனது நண்பர் மதியழகனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து தங்கச் செயின், பணம், மற்றும் இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு மதியழகன் தப்பி சென்றதாக கௌரி சங்கர் போலீசாரிடம் ஒப்பு கொண்டுள்ளார். கௌரிசங்கரை கைது செய்த போலீசார் தப்பி சென்ற மற்றொரு குற்றவாளி மதியழகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பணம் நகை, செல்போன், பைக் ஆகியவற்றிற்காக சிறை நண்பனை மது போதையில் இருவர் கொலை செய்த சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
Next Story