திருப்பூர் ஊத்துக்குளி அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருப்பூர் ஊத்துக்குளி அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு இடையே கேட்டு தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இறந்தவர் அரக்கு நிற டி-ஷர்ட், நீளம், வெள்ளை, கருப்பு, சிமெண்ட் நிற கட்டம் போட்ட லுங்கி, நீல நிற பாக்கெட் வைத்த ஜட்டி அணிந்துள்ளார். கருப்பு நிறத்தில் அரைஞான் கயிறு, வலது கையில் சிவப்பு நிற கயிறு கட்டி உள்ளார்.
இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
