பல்லவன் குளத்தில் நீரில்மூழ்கி ஒருவர் பலி!

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்லவன் குளத்தில் நீரில்மூழ்கி மரணமடைந்த நபரின் உடலை மீட்டது தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை.
புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள சாந்த நாதர் ஆலயதின் அருகேயுள்ள பல்லவன் குலத்தில் இன்று காலை ஒரு நபர் மரணம் அடைந்து நீரில் மிதப்பதாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி மரணமடைந்த நபரின் உடலை மீட்டனர். இதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை டவுன் காவல் நிலைய ஆய்வாளர் மருது தலைமையிலான காவல்துறையினர் மரணம் அடைந்த நபர் பற்றிய விசாரணையை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் புதுக்கோட்டை காமராஜபுரம் 33ஆம் தேதி சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் சிவக்குமார் என விசாரணையில் தெரிய வந்தது. திருமணமாகாத சிவகுமாருக்கு 35 வயது ஆகுவதாகவும், இவர் தின கூலி வேலை பார்த்து வந்ததாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி மரணம் அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலை மீட்க காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சிவகுமாரின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக டவுன் காவல் நிலைய ஆய்வாளர் மருது மரணம் அடைந்த சிவகுமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகிறார் இன்று காலை 8:30 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை நகரத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story