கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் பலி!
பலி
ஆரணி அருகே கழிவுநீர் கால்வாயில் விழுந்து காவலாளி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 55). இவர் தனியார் பட்டு சேலை உற்பத்தியாளரிடம் இரவு காவலாளியாக வேலை செய்து வந்த நிலையில் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கழிவுநீர் சிறுபாலத்தின் கீழ் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டனர். அப்போது இறந்தது பூபாலன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story