வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பலி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்க்கொடுங்காலூர் காவேடு பகுதியில் வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ,வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் காவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம்(வயது 17). இவர், செங்கல்பட்டில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.

வீட்டின் அருகில் சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது மினி சரக்கு வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விக்ரமை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story