திருப்பத்தூர் அருகே மது போதையில் காரை ஓட்டி சென்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

திருப்பத்தூர் அருகே மது போதையில் காரை ஓட்டி சென்று மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

 மது போதையில் காரை ஓட்டி சென்று மோதியதில் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டி சென்று நேர் எதிர் வந்த இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு மூன்று பேர் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டி சென்று நேர் எதிர் வந்த இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு மூன்று பேர் படுகாயம்! திருப்பத்தூர் அடுத்த விசமாங்கலம் பகுதியில் ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த வானகுட்டப்பள்ளி பகுதியைச் சிவகுமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஜமுனா புதூர் பகுதியைச் சேர்ந்த ஜடையன் மகன் ராஜா (46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் விஜயன் (32) மற்றும் ஜெகதீசன் மகன் அரவிந்தன் (27)ஆகியோர் ஒன்றிணைந்து அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மாருதி காரை குமார் அதிவேகமாக தாறுமாறாக விஷமங்கலம் பகுதியில் ஓட்டி வந்துள்ளார். அப்போது பேராம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் குரும்பேரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஆகியோர் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர் அப்போது அதிக மது போதையில் சிவக்குமார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதி உள்ளார்.இதன் காரணமாக இருவரும் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் இருவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் பலத்த காயமடைந்த பேராம்பட்டு அடுத்த கோவிந்தராஜ் (24) என்பவரை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்துள்ளார் மேலும் குரும்பேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் வயது 53 என்பவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜா மற்றும் விஜயன் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிவகுமார் மற்றும் அரவிந்தன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருப்பத்துர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story