தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!
பைல் படம்
தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி பொட்டல்காடு நடுத் தெருவைச் சேர்ந்தவர் அரசமுத்து மகன் சின்ன சுப்பையா (52). இவர் நேற்று முள்ளக்காடு கக்கன்ஜி நகரில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த சின்ன சுப்பையா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து மற்றொரு பைக்கை ஓட்டி வந்த தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் மகன் அந்தோணி என்பவரை கைது செய்து விசாணை நடத்தி வருகிறார்.
Next Story