சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அருகில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. அந்த அந்த நிலத்தை சுற்றி தற்போது முள் வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் அஜித் (23) என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று மருந்துவரின் இடத்திற்குள் அத்து மீறி உள்ளே நுழைந்து அங்கு இருந்த மோட்டர் ரூமில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து உள்ளார். அப்போது பட்டாசு தயாரிக்க பயன் படுத்திய மூலப் பொருட்களில் ஏற்பட்ட ஊராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த வெடி விபத்தில் அந்த மோட்டர் அறை முழுவதும் தரைமட்டம் ஆணை நிலையில் அந்த அறையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து கொண்டு இருந்த அஜித் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் சட்டவிரோத பட்டாசு வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் மற்றும் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடி விபத்தில் பலியான அஜித்தின் உடலை நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு கண்டுபிடித்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சாத்தூர் டிஎஸ்பி மற்றும் தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலக உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டனர். மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இன்று சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story