ஆட்டோ மீது கார் மோதல் - ஒருவர் பலி

ஆட்டோ மீது கார் மோதல்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பரதர் தெருவைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் ஆல்வின் (47), சிலுவை நாடார் விளை தெற்கு தெருவைச் சேர்ந்த சந்திர சேகரன் (77), அவரது மனைவி பட்டுகனி (65) ஆகிய மூவரும் ஆட்டோவில் தூத்துக்குடி அருள்பிரகாசம் மருத்துவமனைக்கு வந்து விட்டு பின்னர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். முத்தையாபுரம் திருச்செந்தூர் மெயின்ரோட்டில் கந்தவிலாஸ் ஹோட்டல் அருகில் செல்லும் போது, சென்னைமேற்கு மாம்பழம் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் செல்வகுமார் (53) என்பவர் ஓட்டிவந்த கார் அவர்களது ஆட்டோ மீது மோதியது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவ்விபத்தில் காயம் அடைந்த மற்ற 2பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
