வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

பைல் படம்

இரணியல் அருகே நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆலங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ரமேஷ் (50) இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மகன் ஜினு 25 என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த ஜினு சொந்த விஷயமாக நேற்று இரவு திங்கள் நகர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். தலக்குளம் பகுதியில் உள்ள இரணியல் கூட்டுறவு வங்கி முன்பு செல்லும்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று பைக் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜினுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜினு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story