சுவர் இடிந்து விழுந்தது ஒருவர் உயிரிழப்பு!
மடவாளத்தில் அங்கநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அர்ச்சகர் உயிரிழந்தார்.
மடவாளத்தில் அங்கநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அர்ச்சகர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அங்கநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அர்ச்சகர் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்கநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்த்த மணி மகன் சரவணன் 53 கோவில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் இன்று வீட்டில் ஆல்ட்ரேஷன் ஒர்க் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோவில் அர்ச்சகரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Next Story