கொடைக்கானல்: விபத்தில் ஒருவர் காயம் மற்றும்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய நகர்ப்பகுதியாக அண்ணாசாலை பகுதி உள்ளது,இந்த பகுதியில் காவல் நிலையம்,வங்கிகள்,வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகையான பொருட்கள் கிடைக்கும் கடைகள் உள்ள பகுதி என்பதால் காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு டெக்ரேசன் பொருட்களை ஏற்றி கொண்டு 7 ரோடு பகுதியில் இயங்கும் தனியார் நட்சத்திர விடுதிக்கு கலையரசு என்ற முதியவர் சரக்கு லாரியை இயக்கி வந்துள்ளார், அப்போது வழிமாறி அண்ணாசாலை பகுதியில் உள்ள இறக்கமான சாலையில் சரக்கு லாரியை இயக்கி உள்ளார்,
அப்போது லாரியில் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையில் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்ட கார்,எதிரே வந்த கார்,அதன் பின்னர் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்களை இடித்து விபத்துக்குள்ளானது, இதனை தொடர்ந்து இப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் எதிரே வந்த கார் ஓட்டுனரையும்,இருசக்கர வாகனத்தில் வந்த நபரையும் துரிதமாக மீட்டனர், இதில் இருசக்கர வாகனத்தை இயக்கியவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பொதுமக்கள் சாலை பகுதியில் நடந்து செல்லததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது, இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இந்த விபத்தால் அண்ணா சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து காவல் துறையினர் விபத்துகுள்ளான வாகனத்தை அப்புறபடுத்தி போக்கு வரத்தை சீர் செய்து வருகின்றனர், மேலும் விபத்து ஏற்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.