திருச்சியில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சியில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ரேசன் அரிசி பறிமுதல் 

திருச்சியில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவா் ஜோஷி நிா்மல்குமாா், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி காவல் ஆய்வாளா் மணிமனோகரன், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் போலீஸாா் திருச்சியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், நேற்று அதிகாலை மேற்கொண்ட ரோந்துப்பணியின்போது, திருச்சி உறையூா் கோணக்கரை பகுதியில் உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் சிலா், ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குசென்று போலீஸாா் பாா்த்தபோது சுமாா் 1000 கிலோ ரேஷன் அரிசி, 20 மூட்டைகளில் நிரப்பி அங்கு அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அருகிலிருந்த நபா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கரூா் மாவட்டம் குளித்தலை வட்டம் கல்லடை பகுதியைச் சோ்ந்த சி.செபாஸ்டியன் அந்தோணி தாஸ் (42), திருச்சி தென்னூரைச் சோ்ந்த செ. ஆனந்த் (42) என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து சுமாா் 20 மூட்டைகள் (1000 கிலோ) ரேஷன் அரிசியைப் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

Tags

Next Story