குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
குண்டர் சட்டம்
திருச்சியில் பணம் கேட்டு மிரட்டிய ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எம்.எம். நகரில் நடந்து சென்ற நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக மதுரை மாவட்டம் சோலை அழகிரிபுரத்தைச் சோ்ந்த ர. திவாகா் (23) என்பவரை திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விசாரணையில், இவா் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, வழிப்பறி, அடிதடி என 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது தொடா் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக, திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, ர. திவாகரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்
Next Story