முத்துப்பேட்டை அருகே விபத்தில் ஒருவர் படுகாயம் லாரி பறிமுதல்

முத்துப்பேட்டை அருகே விபத்தில் ஒருவர்  படுகாயம் லாரி பறிமுதல்
X

முத்துப்பேட்டை அருகே விபத்தில் ஒருவர் படுகாயம் 

லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆத்மநாதன் வயது 60 . இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவிலூர் நெல் குடோனிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருத்துறைப்பூண்டி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆத்மநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story