மலைப்பாதையின் குறுக்கே கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பு

மலைப்பாதையின் குறுக்கே கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பு

பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 14 கி.மீட்டர் தூரத்தில் அரவட்லா மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளன. இரவு வேளையில் பொதுமக்கள், தொழிலாளர்கள் பேரணாம்பட்டில் இருந்து அரவட்லா செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர்.

பாஸ்மார் பெண்டா மலைக்கிராமம் அருகில் சாலையில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இரையை முழுங்கி விட்டு நகர முடியாமல் கிடந்தது. சுமார் 1 மணி நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யாரும் வராததால் இளைஞர்களும், பொதுமக்களும் கூச்சலிட்டவாறு மலை பாம்பை விரட்டினர். மலை பாம்பு சாலையில் கிடந்ததால் சாலையின் இருபுறமும் வாகனங்களிலும், நடந்தும் சென்றவர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தவித்தவாறு காத்திருந்து மலைபாம்பு பாம்பு சாலையின் அருகிலுள்ள புதருக்குள் சென்ற பின்னர் மலை கிராமங்களுக்கு சென்றனர்.

Tags

Next Story