ஓங்காளியம்மன் கோயில் தீமிதி விழா

ஓங்காளியம்மன் கோயில் தீமிதி விழா

தீமிதி திருவிழா

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் மாசி மாத தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி சரபங்கா நதிக்கரை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து சுவாமி காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, இரவு வீதி உலா வந்து கோயிலை சென்றடைந்தது. இதனை தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் இன்று சரபங்கா நதிக்கரைக்கு சென்று மஞ்சள் நீராடி ஊர்வலமாக வந்த பக்தர்கள் கோவிலை சுற்றி வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்து மலர்களை தூவி முதலில் பூசாரி அக்கினி குண்டத்தில் தீ மிதித்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பூங்கரகம் எடுத்தும், குழந்தைகள், பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story