ஓங்காளியம்மன் கோவில் தீமிதி விழா

ஓங்காளியம்மன் கோவில் தீமிதி விழா

தீமிதி திருவிழா

சேலம் மாவட்டம், பெரமாச்சிபாளையம் ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட பெரமாச்சிபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது,இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கமாகும் ,இதையடுத்து இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 22ம் தேதி மாரியம்மன்,ஓங்காளியம்மன் சன்னதியில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது, இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று வந்தது,

விழாவின் முக்கிய நிகழ்வாக திரளான பக்தர்கள் காவேரிபட்டி காவிரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா கோவில் சன்னதி வந்தடைந்தது, இதனையடுத்து தீ மிதி விழாவில் முன்னதாக பக்தர்கள் பெரமாச்சிபாளையம் சரபங்கா நதியில் புனித நீராடி மாலை அணிந்து மயில் அலகு,வேல் அலகு,எலுமிச்சை அலகு, விமான அலகு குத்தியவாறும்,கையில் குழந்தைகள் தூக்கியவாறும் நடந்து சென்று ஓங்காளியம்மன் கோவில் சன்னதியில் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். என்னைத் தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகம் முன்பு பொங்கல் வைத்து ஆடு கோடிகளை படியிட்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Next Story