அய்யன்குளத்தில் மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரைகள்

அய்யன்குளத்தில் மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரைகள்

ஆய்வு 

மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள அய்யன்குளத்தில் மண்டிக்கிடக்கும் வெங்காயத்தாமரையை சிபிஎம் தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் அய்யன்குளத்தில் தற்போது குளத்தை நிரப்பும் வகையில் வெங்காயத்தாமரை படர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மர்மக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், கமிட்டி உறுப்பினரகள் கிருஷ்ணன், தியாகு, மற்றும் கரீம், ரெங்கசாமி, ஆகியோர் கலந்து கொண்டு குளத்தை ஆய்வு செய்தனர். அய்யன்குளத்தை தூர்வாரிமழை நீர் சேகரிப்பு மையம் அமைத்திடுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.

Tags

Next Story