சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி

சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி

சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

திண்டுக்கல் சந்தைக்கு, ஒவ்வொரு முறையும் தலா 150 டன் முதல் 250 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் 470 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக வீழ்ச்சி அடைந்து வரும் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.திண்டுக்கல் சந்தையில் வெங்காய கொள்முதல் விலை ரூ.15 முதல் ரூ.25-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஒட்டன்சத்திரம் சந்தையின் கொள்முதல் விலை ரூ.22-ஆக இருந்தது. இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கைக்கு மட்டும் 120 டன் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதால், வெங்காயம் தேக்கமடையாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story