ஆன்லைன் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆன்லைன் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு பேரணி 

கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் ஆன்லைன் குற்ற தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஆர்.கே.எஸ்., கல்லுாரி என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மாணவ, மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக குழந்தைகள், பெண்கள் மீதான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், மாணவர்களிடையே பேசுகையில், 'போதிய விழிப்புணர்வு இல்லாததால் தற்போது ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை மாணவர்களாகிய நீங்கள் முழுமையாக அறிந்து கொள்வதுடன், உங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு எடுத்துக்கூறி குற்றங்களை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஆன்லைனில் எந்த காரணம் கொண்டும் வங்கி கணக்கு எண்கள், அதில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள், பாஸ்வேர்டுகள், ஓ.டி.பி., கே.ஒய்.சி., உள்ளிட்ட தகவல்களை வெளியிடக்கூடாது. மேலும் நிதி சார்ந்த லோன் ஆப்கள், அதிக வட்டி தருவதாக கூறும் மெசேஜ் லிங்க்குகள் கொண்ட விளம்பரங்களைத் தொடக்கூடாது. ஏ.அய்., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் பெண்கள், ஆண்களின் ஆபாச படங்கள் வெளியிடுவது அதிகமாகி வருவதால் யாரும் தங்களின் உண்மையான படங்களை ஆன்லைனில் வெளியிடுவது ஆபத்தானதாக மாறிவிடும். மேலும் ஜிபே, போன்பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யும் வங்கி கணக்குகளில் குறைந்த தொகையை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story