குமரியில் போலீஸ் பெயரில் ஆன்லைன் மோசடி

குமரியில் போலீஸ் பெயரில் ஆன்லைன் மோசடி
குமரி போலீஸ் எச்சரிக்கை
கன்னியாகுமரியில் போலீஸ் பெயரில் ஆன்லைன் மோசடி நடப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீஸ் எஸ்பி., அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விதமான ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தற்போது அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் தற்போது போலீஸ் பெயரில் மோசடிகள் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காவல்துறை அதிகாரிகள் பேசுவது போல் செல்போனில் வீடியோ கால் செய்து நீங்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் தற்போது உங்களை வீட்டுக்கு காவலில் வைத்திருப்பதாக கூறுவார்கள். மேலும் வீடியோ காலில் காவலர் உடை போன்று உடை அணிந்து வரும் நபர் உங்களை வழக்கிலிருந்து தப்ப வைப்பதாக கூறி நம்ப வைத்து பணம் கேட்கும் மோசடி சம்பவங்கள் தற்போது அரங்கேறி வருகிறது.

எனவே இதுபோன்று யாரேனும் தொடர்பு கொண்ட பணம் கேட்டால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சென்று அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். இது போன்ற மோசடிகளில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story