திண்டுக்கல்லில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: புகார்

திண்டுக்கல்லில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி:  புகார்

கோப்பு படம் 

இணைய வழியில் பணம் பறிக்கும் நபா்களால் பாதிக்கப்பட்ட 7 போ் திண்டுக்கல் இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை தேடும் இளைஞா்களைக் குறிவைத்து, அவா்களது கைப்பேசி எண்ணுக்கு மா்ம நபா்கள் குறுந்தகவல் அனுப்புகின்றனா். குறைந்த வேலை நேரத்தில் அதிக ஊதியம் பெறலாம் என்றும், இதற்கு முன்பணமாக குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனா்.

மேலும், சிலருக்கு பரிசுத் தொகை விழுந்திருப்பதாகவும், அதைப் பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் குறுந்தகவல் அனுப்புகின்றனா். இதை நம்பி, திண்டுக்கல், ஆத்தூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழனி பகுதியைச் சோ்ந்த பலா், மா்ம நபா்கள் கேட்கும் விவரங்களை தெரிவித்து இணைய வழியில் பணத்தைப் பறிகொடுக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

Tags

Next Story