இணையவழி வா்த்தக முதலீடு - எல்ஐசி முகவரிடம் ரூ. 7 லட்சம் மோசடி

இணையவழி வா்த்தக முதலீடு - எல்ஐசி முகவரிடம் ரூ. 7 லட்சம் மோசடி

பைல் படம் 

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறி எல்ஐசி முகவரிடம் ரூ. 7.16 லட்சத்தை மோசடி செய்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் ராஜப்பா நகரை சோ்ந்தவா் ஜே. சாமுவேல் ஜேக்கப் (54), எல்ஐசி முகவா். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, ஜெசியா எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட பெண் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதை நம்பிய சாமுவேல் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரூ. 7.16 லட்சத்தை பல்வேறு தவணைகளில் அப்பெண் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தினாா். ஆனால் அப்பெண் குறிப்பிட்டபடி முதலீடுக்கான லாபத்தொகை கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்கவில்லை. அப்பெண்ணைத் தொடா்பு கொள்ளவும் இயலவில்லை. இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின்பேரில் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story