'ஆன்லைன்' இன்டர்வியூ மோசடி பெண்ணிடம் ரூ.35,000 'அபேஸ்'

ஆன்லைன் இன்டர்வியூ மோசடி பெண்ணிடம் ரூ.35,000 அபேஸ்

கோப்பு படம் 

'ஆன்லைன்' இன்டர்வியூ மோசடி பெண்ணிடம் ரூ.35,000 'அபேஸ் செய்த மர்மநபர்கள் போலீசார் தேடி வருகிறார்கள்.

வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பத்தைச் சேர்ந்தவர் சரவணன், 36. இவரது மனைவி செந்தமிழ் அரசி, 31. பட்டதாரியான இவர், வேலை தேடி வந்துள்ளார். இவரது 'பேஸ்புக்' பக்கத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக வந்த விளம்பரங்களை பார்த்துவிட்டு, அதில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது, அந்த நிறுவனத்தின் மேலாளர் பேசுவதாக கூறியதாகவும், படிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்த பின், 'ஆன்லைன்' வாயிலாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, நேர்முக தேர்வு நடத்தியுள்ளனர்.

இதில், 'செந்தமிழ் அரசி தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம்' எனக் கூறிய நபர்கள், 'அதற்கு முன்பணமாக 35,000 ரூபாய் செலுத்தினால், பணி நியமன ஆணை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்' எனக் கூறியுள்ளனர். இதை நம்பிய செந்தமிழ் அரசி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 35,000 ரூபாயை அனுப்பினார். அதன் பின், பணம் அனுப்பியதை உறுதி செய்வதற்காக மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது,

அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அதன் பின், அந்த எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அப்போது தான், ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரையடுத்து, வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story