இணையவழி வேலை - ரூ. 33.42 லட்சம் மோசடி

இணையவழி  வேலை - ரூ. 33.42 லட்சம் மோசடி
இணையவழி மோசடி
இணையவழி மூலம் வேலை எனக் கூறி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அலுவலரிடம் ரூ. 33.42 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தைச் சேர்ந்தவர் 37 வயது இளைஞர் திருச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தில் முதுநிலை கணக்கு அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு டெலிகிராம் செயலி மூலம் 2023, டிசம்பர் 21 ஆம் தேதி வந்த தகவலில் இணையவழி மூலம் டாஸ்க்களை நிறைவேற்றினால் பணம் சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய இவரிடம் ஒவ்வொரு டாஸ்க்குக்கும் பணம் செலுத்த வேண்டும் என மர்ம நபர் கூறினார்.

இதன்படி, இணையவழியில் வங்கிக் கணக்கு மூலம் பணத்தை செலுத்திய தனியார் நிறுவன அலுவலருக்கு முதலில் லாபத் தொகை கிடைத்தது. அதன் பிறகு பல்வேறு கட்டங்களாக ரூ. 33 லட்சத்து 42 ஆயிரத்து 350 அனுப்பிய தொகைக்கு பணம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மர்ம நபருக்கு தனியார் நிறுவன அலுவலர் தொடர்பு கொள்ள முயன்றபோது எதிர்முனையில் எடுக்கவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனியார் நிறுவன அலுவலர் தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story