தேவையற்ற இணைப்புகளை திறக்க வேண்டாம்; போலீசார் எச்சரிக்கை

தேவையற்ற இணைப்புகளை திறக்க வேண்டாம்; போலீசார் எச்சரிக்கை

ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், தேவையற்ற செல்போன், இ-மெயில், எஸ்எம்எஸ் மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாமென போலீசார் எச்சரித்துள்ளனர். 

ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், தேவையற்ற செல்போன், இ-மெயில், எஸ்எம்எஸ் மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாமென போலீசார் எச்சரித்துள்ளனர்.
இன்றைக்கு அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமே நடந்து வருகின்றன. ஆன்லைன் மூலம் வெளி நாடுகளில் வேலைக்கு முயற்சிப்பது, விலையுயர்ந்த செல்போன் மற்றும் பொருட்கள் ஆன்லைன் மூலம் வாங்குவதற்காக புக்கிங் செய்வது, பரிசு பொருட்கள் வந்துள்ளதாக வரும் கால்கள், பணம் இரட்டிப்பாக தருவதாக வரும் விளம்பரங்கள் என பல்வேறு வகைகளில் மக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்பிலேயே உள்ளனர். இந்த தொடர்புகளில் உள்ள லிங்க், வாட்ஸ்அப் எண், இ.மெயில் உள்ளிட்டவற்றை குறி வைத்து தொடர்ந்து மோசடிகள் நடந்து வருகின்றன. செல்போன், இ-மெயில், எஸ்.எம்.எஸ்., மூலம் வரும் தகவல்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story