நீர்வரத்து இல்லாததால் 137 ஏக்கர் மட்டுமே பாதிப்பு

நீர்வரத்து இல்லாததால் 137 ஏக்கர் மட்டுமே பாதிப்பு

மாவட்ட ஆட்சியர்

நீர்வரத்து இல்லாததால் 137 ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் 137 ஏக்கர் மட்டுமே போதிய தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 1.98,880 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதில், இதுவரை 1,76,000 ஏக்கரில் அறு முடிந்துள்ளது. மேட்டூர் அணையில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் 33 சதவீதத்துக்கும் மேல்137 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இதன் அறிக்கை பேரிடர் மேலாண்மைவபிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவையில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக செப்.1-ம் தேதி முதல் 238 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 24,676 விவசாயிகளிடமிருந்து 1,13,729 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.259 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக இதுவரை 1,36,247 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடிக்கு ஏற்ற நீண்ட மற்றும் மத்திய கால விதைநெல் 987 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தேவையான ரகங்களில் விதைநெல் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ஆம் தே வரை நிர்ணயம் கால செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.542 பிரீமியத்தை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்டு, வங்கிகளின் சிபில் நடவடிக்கைக்கு ஆளான விவசாயிகள் நேரடியாக உரிய ஆவணங்களுடன் ஆட்சியரை அணுகி புகார் அளித்தால், தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story