ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை

அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை. ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை தயான் சந்த் விளையாட்டு பயிற்சி கூடத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 39 மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று அதிகளவு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் சிப்பிற்கான தயான் சந்த் கோப்பையை வென்று சாதனை புரிந்தனர். போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் எட்டு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ரக்ஷித் இரண்டாம் இடமும், பத்து வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் காவியலட்சுமி முதல் இடமும், தியாதர்ஷினி மூன்றாம் இடமும், ஹர்ஷிகா இரண்டாம் இடமும், கிருத்திகா முதல் இடமும், சத்ருபா மூன்றாம் இடமும், அக்ஷனா ஸ்ரீ முதலிடமும், ஜனாஸ்ரீ இரண்டாம் இடமும், தனுஷியா, ஹேமாஸ்ரீ ,இஷங்கா சுபாஷினி ஆகியோர் மூன்றாம் இடமும், லக்ஷிதா ஸ்ரீவர்தினி இரண்டாம் இடமும், கவினேஷ் முதல் இடமும், பிரணவ் முதல் இடமும், விகாஸ் இரண்டாம் இடமும், பன்னிரண்டு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் வேனுஷா முதல் இடமும், வினித், ஸ்ரீகுமரன், தவனேஷ்யாதவ் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். பதினான்கு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஷாலினி இரண்டாம் இடமும், பத்து வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பூஜா, பிரீஜா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், பிரவீன் குமார் மூன்றாம் இடமும், தேவேஷ் முதல் இடமும், பன்னிரண்டு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஹரிஷ் முதலிடமும், சம்ருக்ஷன் இரண்டாம் இடமும், யஷ்வந்த் மூன்றாம் இடமும், ஸ்ரீஅனிஷ், சுகன்ராஜ், நிதிஷ்குமார் ஆகியோர் இரண்டாம் இடமும், குரு பிரசாத் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். பதினான்கு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கருணா சாகரிகா மூன்றாம் இடமும், யாஷிகா வெங்கடேஷ், சாய்லேஷ்குமார் ஆகியோர் இரண்டாம் இடமும், இமயவன் மூன்றாம் இடமும், காமேஷ், ரூபன் ஆகியோர் இரண்டாம் இடமும் மற்றும் ஹரிப்பிரியன் மூன்றாம் இடமும். பதினான்கு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் போமேஸ்வர் இரண்டாம் இடத்தை பெற்றார். சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால் முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஷோபாதிருமால் முருகன், நிர்வாக அலுவலர் கணபதி ராமன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஷ் சான்றிதழ் வழங்கி, பரிசளித்தும் பாராட்டினர். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்பயிற்சி ஆசிரியர்களையும் பாராட்டினர்.

Tags

Next Story