திறக்கப்பட்ட கழிப்பிடம் 2 நாட்களில் பூட்டிக் கிடக்கும் அவலம்!

காங்கேயம் அடுத்த எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி என்.காஞ்சிபுரம் பகுதியில் நாட்டான் வலசு  ஆதிதிராவிடர் காலனியில் டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட கழிப்பிடம் 2நாள் கழித்து மீண்டும் ஊராட்சியால் பூட்டப்பட்டது. கழிப்பிடத்தை திறக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை.
காங்கேயம் தாலுக்கா எல்லப்பாளையம் புதூர் கிராம ஊராட்சியில் என்.காஞ்சிபுரம் பகுதி நாட்டான் வலசுசில் ஆதிதிராவிடர் காலனி அமைந்துள்ளது. இங்கு சுமார் 80 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிகின்றனர்.கடந்த வருடம் இந்த காலனியில் 5 லட்சத்து 50 ஆயிரத்தில் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்தக் கழிப்பிடம் அமைந்த இடத்திற்கு எதிரே அமைச்சர் உதயநிதி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த கழிப்பிடம் கட்டப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெற்ற 2 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட கழிப்பிடம் பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் அடுத்த 2 நாட்களில் ஊராட்சி மன்றத்தால் கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளது. பின்னர் சோதனை செய்ததில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்திற்கு மின் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை கழிவு நீர் சேகரிக்கும் நிலத்தொட்டி கட்டவில்லை, அதற்கு பதிலாக ரெடிமேட் ரிங் 4 அடிக்கு அமைத்து கட்டப்பட்டு இருந்தது. 4 அடி குழிக்குள் கழிவுகள் 2 நாட்களிலேயே நிறைந்து கழிவுகள் வெளியேறி குடியிருப்புக்குள் தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மக்கள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் இரவில் மட்டும் திறந்த வெளியில் இயற்கை உபாதைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது என்று அரசு தெரிவித்து வரும் வேளையில் எங்கள் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிக்க வழிவகைகளையும் அரசே செய்கிறது என்கின்றனர். உடனடியாக கழிப்பிடத்தை சரிசெய்து திறந்துவிடவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கின்றனர்.

Tags

Next Story