திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா

திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா
X

நூலகம் திறப்பு விழா

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா.
நாகை மாவட்டம் திட்டச்சேரி மெயின் ரோடு பகுதியில் திமுக மாநில இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமை தாங்கி நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இளைஞரணி மாநில துணை செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார்.இதில் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், திட்டச்சேரி நகர செயலாளர் முகமது சுல்தான், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர்கள் அசோக், தாமோதரன், சுரேஷ், கலையரசன், டேனியல் சத்தியா, மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், ஜெயபால், ஹமீது ஜெகபர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story