கலசபாக்கம் ஒன்றியத்தில் 6 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு

கலசபாக்கம் ஒன்றியத்தில் 6 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள்  திறப்பு

ரேஷன் கடையை திறந்து வைத்த சரவணன் எம்.எல்.ஏ 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சியில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை சரவணன், எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன். தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி லட்சுமணன் (எ) சீனு, அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் ரூ 73.8 லட்சத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை சரவணன், எம்எல்ஏ திறந்து வைத்து பேசியதாவது. புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு, சி.நம்மியந்தல், தாமரைப்பாக்கம், காஞ்சி, வீரானந்தல், படிஅக்ரகாரம், ஆகிய 6 ஊராட்சிகளில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை தலா ரூ 12.30 லட்சத்தில் கட்டிடங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது . புதுப்பாளையம் ஒன்றியத்தில் பல நல திட்ட உதவிகள் மக்களுக்காக செய்துள்ளோம். அதுவும் குறிப்பாக மக்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளில் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுத்து வருகிறோம். புதுப்பாளையம் ஒன்றியத்தில் சாலை வசதிகள் அனைத்தும் 92% சதவீதம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் கல்வெட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பக்க கால்வாய், பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சமையலறை கூடம். பகுதிநேர ரேஷன் கடைகள், சமுதாயக் கூடங்கள், கோயில் புனரமைத்தல் போன்ற அனைத்து வளர்ச்சி பணிகளும் அதிகமாக செய்து வருகிறோம் மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொடுத்து வருகிறோம். என்று கூறினார். நிகழ்ச்சியில் இன்ஜினியர் தனவந்தன். ஒன்றிய கவுன்சிலர்கள் பவ்யா ஆறுமுகம், பூங்கொடி, முனியப்பன், பாரதிதாசன், வாசுகி பரமசிவம், ரமேஷ், பஞ்சாயத்து தலைவர்கள் பூங்காவனம் ஜெயராஜ். சரஸ்வதி கோபால், மஞ்சுளா முருகன், மகேஸ்வரி சுதாகர், துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், சசிகலா. மற்றும் கழக நிர்வாகிகள் பிரதிநிதிகள் அரசு உள்ளாட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story