சங்ககிரி அருகே புதிய கட்டிடம் திறப்பு? ஏக்கத்தில் மாணவர்கள்...!
புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கவாடி கட்டிடம்
சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி 10 வது வார்டு மஞ்சக்கல்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் 20 மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகத்துறை சார்பில் 9.08 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தற்காலிகமாக வாடகை கட்டிடத்திலேயே அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதத்திற்கும் மேலாகியும் மின் இணைப்பு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய கட்டிடத்திற்கு மாற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள்,பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.