கடையம்பெரும்பத்தில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு

கடையம்பெரும்பத்தில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு

மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு

தென்காசி மாவட்டம், கடையம்பெரும்பத்தில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைப்பெற்றது.

தென்காசி மாவட்டம் , கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம் பெரும்பத்து ஊராட்சி சீயோன் நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் பரிந்துரையின் பேரில், 15வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 92 ஆயிரத்து 368 மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை வகித்து, திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் அரசகனி ரவி, வார்டு உறுப்பினர்கள், மற்றும்டேனியல், ஆசீர்ராஜா, மாரி, கெலின், ரமேஷ், சுரேஷ், தங்கப்பான்டி, சக்திஸ்வரன், பால்துரை, கோயில், செல்லத்துரை, மணிகண்ட பிரபு, குட்டி, பாஸ்கர், குமார், மாணிக்கராஜ், அரசு ஒப்பந்தகாரர் வெங்கடேஷ், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஆனை மணி நன்றி கூறினார்.

Tags

Next Story