கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்ணங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில், 7.50 லட்சம் மதிப்பீட்டில் மூன்று கூடுதல் கட்டிடங்கள் மற்றும், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மகாத்மா காந்தி நூலகத்திற்கான கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

இந்த இரு கட்டிடங்களையும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்து, புத்தகங்கள் வாசிப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி,தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story